Chitra Pournami
Chitra Pournami
Adi Pooram

“‘சக்திஒளி’” மாத இதழ் பற்றிய அன்னையின் சில அருள்வாக்குகள் :

  • “ஒவ்வொருவர் வீட்டிலும் ‘சக்திஒளி’ இருக்க வேண்டும் , எந்தெந்த வீட்டில் சக்திஒளி இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன் மகனே! “
  • “ ‘சக்திஒளி’ வெளியிடும் பொறுப்பையும் பெண்கள் ஏற்றுச் செய்ய வேண்டும்.ஓவ்வொரு வீட்டிற்கும் காலண்டர் இருப்பது போல ‘சக்திஒளி’ இருக்க வேண்டும் “
  • “யார் யார் வீட்டில் ‘சக்திஒளி’ ‘சக்தி மாலை’ இதழ்கள் இருக்கின்றதோ அவர்கள் நலமுடன் வாழ்வார்கள்.”
  • “நம் பக்தர்கள் மற்றும் தொண்டர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு ‘சக்திஒளி’ எப்போதும் இருக்க வேண்டும் . நல்ல எண்ணத்தோடு செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் வெற்றியாக முடியும் . அதை அனுபவத்தில் உணரலாம் .”

“‘சக்திஒளி’” பற்றி அன்னையின் ஆசியுரை முதல் இதழில் :

  • “உலகமெல்லாம் சக்திநெறி ஓங்க வேண்டும் ;
  • ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும் .”

‘உலகில் இன்று காணப்படும் துயரங்கள் அனைத்தும் நீங்கி , மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் ‘ என்றே – அன்னை ஆதிபராசக்தி – இம்மருவத்தூர் மண்ணில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி வருகிறாள். மக்களிடம் பக்தியும் நல்ல எண்ணமும் , ஆன்மிக ஈடுபாடும் கட்டாயம் வேண்டியவையாகும்.இவைகளை கருவாகக்கொண்டே ‘சக்தி ஒளி’ திங்கள் இதழ் வெளிவருகிறது.

‘இன்றைய அறிவியல் உலகில், ‘நல்லது இது – கெட்டது இது’ என மக்கள் யாரும் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை!. இம்மயக்கம் தீர்ந்து-அனைவரும் மெய்ஞானக் கண் கொண்டு அஞ்ஞானம் அகற்றி வாழ-அன்னையின் திருவருளால் அவள் அருளாணை தாங்கி வரும் ஏடு இது!.

‘பக்தர்கள் அனைவரும் இவ்விதழ் மூலம் சக்தியின் தண்ணருள் அனைத்தும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்களாக!.


“‘சக்திஒளி’” :

ஆன்மிக ஒளி பரப்பும் அறிவுச்சுடரான ‘சக்திஒளி’ மாத இதழ் நமது சித்தர் பீடத்தில் 1982 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

பல ஆன்மிகவாதிகளும் , தமிழ் சான்றோர்களும் , இலக்கிய மேதைகளும் , உயர் கல்வியாளர்களும் , மருத்துவ வல்லுனர்களும் , பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களும் ஆரம்ப நாட்களில் அன்னை ஆதிபராசக்தியின் அவதாரமாக விளங்கும் நமது “அம்மா” அருள்திரு பங்காரு அடிகளாரைப் பற்றி தெளிவான பல கட்டுரைகளை வெளி உலகிற்கு ‘சக்திஒளி’ இதழ் மூலம்தான் எடுத்துரைத்தனர்.

நமது சித்தர் பீடத்தின் மகிமைகள் , அற்புத நிகழ்வுகள் , பக்தர்களின் உண்மை அனுபவங்கள் , அன்னையின் அரிய பல சித்தாடல்கள் ஆகியவை அனைத்தும் ‘சக்திஒளி’ இதழ் மூலமாகத்தான் உலக மக்கள் அறியப் பெற்றனர்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தகுந்தாற்போல் ‘சக்திஒளி’ மாத இதழ் அம்மாவின் அருளால் புதுப் பொலிவுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது ‘சக்திஒளி’ இதழில் , அன்னையின் முத்தான அருள்வாக்குகள் , பொருட்செறிவுள்ள பல கட்டுரைகள்,சித்தர் பீடத்தைப் பற்றிய பல்துறை வல்லுனர்களின் கண்ணோட்டங்கள் , வாழ்க்கை அனுபவங்கள் ,இளம் சிறார்களுக்கான அம்மாவின் வரலாற்றுப் படக்கதைகள் , சித்தர்பீடத்தின் விழாக்களைப் பற்றிய கட்டுரைகள் , மற்றும் ஆதிபராசக்தி கல்வி நிறுவனச் செய்திகள் ஆகியவை நல் விருந்தாக வாசகர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

‘யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்பதற்கிணங்க ‘சக்திஒளி’ இதழின் பெருமையையும் , அதனைப் பெறுவதன் மூலம் அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகும் அருளையும் மக்களுக்கு எடுத்துரைத்து அனைவர் இல்லங்களிலும் அன்னை ஆதிபராசக்தி ‘சக்திஒளி’ வடிவில் உலா வரத் தொண்டாற்றி அன்னையின் அருளுக்குப் பாத்திரமாவோமாக!.


Upcoming Festivals

>ஆவணி-10 ஞாயிறு 26.08.2018 அன்று பொர்ணமி ஓம் சக்தி விளக்கு பூசை

ஆவணி- 24 ஞாயிறு 09.09.2018 அன்றுஅம்மாவாசை வேள்வி

புரட்டாசி 08 திங்கள் 24.09.2018 அன்று பொர்ணமி ஓம் சக்தி விளக்கு பூசை

புரட்டாசி 22 திங்கள் 08.10.2018 அன்று அம்மாவாசை வேள்வி

புரட்டாசி 23 செவ்வாய் 09.10.2018 அன்று சித்தர் பீடத்தில் நவராத்திரி பெருவிழா ஆரம்பம்


Adhiparasakathi Siddhar Peetam

Arul Vakku
அடிகளார் பிறந்த நாளை ஒட்டி தான தர்மம் செய்து பார் , அதனால் வரும் பயனை உணர்வாய்                     “ சாதாரண நிலையிலும் நான் அடிகளாரோடு இருப்பேன் “ , அடிகளார் பார்வைக்கும்,பாதம் பட்ட மண்ணிற்கும் மகிமை உண்டு                     ஆயிரத்தெட்டு முறை பாலகன் பார்வை எவன் மீது படுகிறதோ அவனுக்கெல்லாம் ஜென்ம சாபல்யமடா                     இந்த மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தக்கபடிதானடா அடிகளாரது ஆற்றலை வெளிப்படுத்துவேன்.                     அடிகளாரை வணங்குவது உன் வேலை, உன்னை ஏற்றுக்கொள்வது என் வேலை.                     அடிகளாருக்கு வேள்விச் சக்கரத்தின் தன்மைகள் எல்லாம் தெரியும்.                     அடிகளார் பாதத்திற்கும், பாதம் பட்ட மண்ணிற்கும் முக்கியத்துவம் உண்டு.                     மகனுக்கு என்றைக்கு தண்ணீர் ஊற்றி மகானாக ஆக்கினேனோ, அன்றைக்கே என் அருளை பரிபூரணமாக பெற்றுக்கொண்டான்.                     நாளைய உலகில் அடிகளார் பேச்சுக்கும், பார்வைக்கும் மகிமை உண்டு.                     நானாக அவன் இருப்பான், அவனாக நான் இருப்பேன்.                     அடிகளார் காலில் விழுந்து வணங்குவதால் உனக்கு தன்மை கருதாத தவப்பயன் உண்டாகும்.                     ஐம்பூதங்களை வணங்காவிட்டால் மனித வாழ்வில் பிரச்சினைதான் ஏற்படும்.                     பௌர்ணமி தினத்தில் குருவுக்கு பாத பூஜை செய்து பாவ செயலுக்கு மன்னிப்பு கேட்பது நல்லது.                     பூமி, ஆகாயம், மேகம், தண்ணீர் இவையாவும் தனது வசதிக்காக மட்டுமே என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.                     ஒவ்வொரு உள்ளத்திலும் ஒளி ஏற்ற வரும் விழாவே தைப்பூச ஜோதி விழா.                     குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எதையும் சாப்பிடக் கூடாது.                     தாய்ப்பாசம் உள்ள மண் தமிழ் மண், இயற்கையை நம்புகிற மண் இந்த மண், எனவே தான் இந்த மண்ணிலே நான் தமிழ் பேசி அருள்வாக்கு தருகிறேன் மகனே!                     மேலமருவத்தூர் தான் பெண்களை ஆன்மீகத்திற்கு உருவாக்கி கொடுக்கிறது, பெண்களை பேதைகளாக நினைக்க கூடாது.                     கலச விளக்குகளுக்கு விலை வைப்பது உன் பாவ மூட்டை குறைய தான்.                     உன் மனம் மட்டும் தூய்மையாக இருந்து விட்டால் எந்த வினையும் நெருங்காது, சூனியமும் கிடையாது.                     இயற்கையில் இந்த ஐம்பூதங்களையும் உங்கள் வாழ்க்கைக்கு தக்கவாறு மாற்றி தருகிறேன்!                     நீங்கள் செய்யும் பாவமும்,தெய்வ நிந்தனையும் தான் கோள்களை வெடிக்கச் செய்கின்றன.                     இந்த மருவத்தூர் மண்ணிற்கே அடிகளாரால் தான் பெருமை!                     என்னையும் என் வழிமுறைகளையும் ஆராயாதே அவை உன் மூளைக்கு எட்டா!                     ஆணி வேரும் சல்லி வேரும் இல்லாமலேயே மரம் வளர்ப்பவள் நான்!                     பக்தியுள்ள செவ்வாடை தொண்டனின் ஊழ்வினையையும் மாற்றுவேன்.                     உங்கள் குணத்திற்கு தான் அம்மாவே தவிர பணத்திற்கு அல்ல!                     எல்லா ஜீவனுள்ளும் நானாக இருப்பது நான் தான் மகனே!                     நீங்கள் செய்யும் தருமம் தான் உங்கள் முன்னேற்றத்துக்கு சாட்சியாகவும் சாதகமாகவும் அமையும்.                     ஆடம்பரத்தை நீக்கிக் கொள்ள வேண்டும், ஏமாற்றுபவர்களிடம் ஏமாறாமல் இருப்பது முக்கியம்.                     ஆன்மீகம் ஆன்ம ஒளியும் ஆன்மக் கருத்தும் நிறைந்ததாகும்.                     வாழ்கையில் அமைதி கிடைக்க வேண்டும் என்று நினைத்து தொண்டு செய்ய வேண்டும்.                     எல்லோரும் அறிவாளியாகவும், எல்லோரும் பணக்காரனாகவும் ஆகிவிட முடியாது.                     நீ சும்மா இருந்தாலும் உன் ஊழ்வினை சும்மா விடாது!                     அது தான் தெய்வம்! இது தான் தெய்வம்! என்று அங்குமிங்கும் அலையாதே, உன் ஆன்மா தான் தெய்வம்!                     நான் என்பது நீங்கி நாம் என்ற நிலை வர வேண்டும்.                     இரும்பை ஈர்க்கும் சக்தி காந்தத்திற்கு உண்டு. அதுபோல எதையும் இழுக்கும் சக்தி ஆன்மீகத்திற்கு உண்டு!                     தொண்டு செய்யச் செய்யத் தான் உன் ஆன்மா வைரம் பாய்ந்து உறுதி பெரும்.                     உனக்கு கொடுப்பதற்காகவே, உன்னை கொடுக்க வைக்கிறேன்.                     ஆன்மிகத்தில் ஏற்படுகின்ற பொறாமை உணர்வையும் ஆசைகளையும் கடக்க வேண்டும்.                     அருளும் உண்டு, பொருளும் உண்டு. சத்தாடுவேன், சித்தாடுவேன்!                     என்றும் அழியாமல் இருப்பது தர்மம், அனைவரையும் கவர்ந்து இழுப்பது சக்தி.                     இந்த மண்ணை மிதித்தாலே அதற்கு ஏற்ற பலன் உண்டு!                     பக்தியும்,சக்தியும் இல்லாததால் கத்தி.                     அடிகளாரை அம்மா என்று உண்மை உணர்வுடன் பார்க்கும்போது, சமுதாயத்திற்கு மழையும் கொடுக்கிறேன்.                     அடிகளார் பார்வை, சூரிய ஒளிக்கு ஒப்பானது, அவன் பார்வைக்கு பாவம் போக்கும் சக்தி உண்டு! மகிமை உண்டு!                     நீ யார்? உன் தன்மை என்ன? என்பதை புரிந்து கொள்ளும் சக்தி அடிகளார் பார்வைக்கு உண்டு!                     உங்களுடைய ஆதாரதிர்க்காகத்தான், நான் அடிகளராக அவதாரம் எடுத்து வந்துள்ளேன்.                     பெண்களின் மேன்மைக்காகவே சக்தி ரூபம் எடுத்து வந்துள்ளேன்.                     அடிகளார் கலியுக அவதாரம்!அடிகளாரிடம் பழகுகிற வாய்ப்பு இன்னும் சில வருடங்களுக்குத்தான் உண்டு!                     அடிகளார் காலத்தில் வாழ்கிறோம், அவன் அருளுரைகளை கேட்கிறோம் என்று பெருமைப்படு!                     அடிகளாரிடம் பழகும்போது பய பக்தியுடன் பழக வேண்டும். அகலாமலும், அணுகாமலும் பழக வேண்டும்!                     ஆன்மிகத்தை விடாமல் பற்றிக்கொள்! சரணாகதித் தத்துவத்தை கடைபிடி! அடிகளாரைப் பற்றிக்கொள்!                     அடிகளார் என்கிற ஜீவன் இல்லையென்றால் இங்கே பலர் ஜீவனத்துக்கு வழியில்லாமல் போய்விடும்!                     அடிகளாருக்கு குரு காணிக்கை வைத்து வழி படு! அதனால் உனக்கு அருளும் உண்டு! பொருளும் உண்டு!                     எதையும் உள்ளன்போடு செய்!அதனால் உனக்குத்தான் பலன்! அடிகளாருக்கு அல்ல என்பதை மறவாதே!                     உலகத்திற்கு அச்சாணியாகதான் அடிகளாரை அவதாரமாக கொடுத்திருக்கிறேன்!                     ஆன்மிகத்திற்குத்தான் சக்தி அதிகம்! அடிகளாருக்கு மாபெரும் ஆன்ம சக்தி உண்டு.                     உங்களுக்கு நிம்மதியும் அருளும் வேண்டுமானால், ஆண்மிகத்துறையிலும், என் ஆலயத்திலும் தான் கிடைக்கும்.                     ஆன்மாதான் அமைதி கொடுக்கும்,அதற்கு தெய்வ வழிபாடு அவசியம்.                     மன்றத்தில் ஆண் ஆணுக்கும், பெண் பெண்ணுக்கும் சக்தி மாலை போட வேண்டும், மாற்றி செய்யக் கூடாது.                     ஆன்மிகம் என்ற மாம்பழம் மேல்மருவத்தூரில் உண்டு.                     ஒவ்வோருவருக்கும் அவரவர்க்கு அளந்தபடிதான் கிடைக்கும்.சொத்தும் சுகமும் அப்படியே.                     துன்பத்தின் மூலம் தான் சிறந்த அனுபவம் கிடைக்கும்.அதை அனுபவித்தே பெற வேண்டும்.                     எந்த ஊசியலும் மாத்திரையாலும் எல்லா நோயையும் கட்டுப்படுத்திவிட முடியாது.நீ செய்த பாவம் உன்னை சும்மா விடாது.                     தெய்வ சக்தி நிழலைப் போல உன்னை கண்காணித்து வருகிறது!                     தன்னால் ஆக்கப்பட்டது ஊழ்வினை, பிறரால் செய்யப் பட்டது செய்வினை.                     அவனவன் எண்ணமே அவனுக்கு எமனாக மாறும்.                     நேர்மையாக உழைத்து வியர்வை சிந்தப் பெறுகிற பொருள் தான் உனக்கு நிலைக்கும்.மற்றவை நிலைக்காது.                     கல்லுக்குள் தேரையும், பழத்திற்குள் பூச்சியும் இருப்பது போல, உங்கள் உடலுக்குள் பாவமும் இருக்கும்.                     விதைக்கேற்றபடி பயிர் முளைப்பது போல அவனவன் விதிகேற்றபடியே பிறவியும் ஏற்படும்.                    
Amma